Thursday 23 February 2012

கடலில் கரைந்த கன்னி!


கடலில் கரைந்த கன்னி!



சூரியன் மெல்ல மெல்ல மேற்கில் தன் கதிர்களைக் சுருக்கிக்கொண்டு மறைந்துகொண்டிருந்தபோது, அதனைப் பார்க்க மனதில்லாதவன் போல கிழக்கு திசையில் உள்ள கடலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வாலிபன். ஏறக்குறைய இருபத்து மூன்று வயது இருக்கும். எடுப்பான தோற்றம், மாநிறம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த படித்த வாலிபன். கடற்கரையில் காற்று வாங்கும்படி வந்த பலரது இரைச்சல்கள் அந்த வாலிபனின் சிந்தையை சிதறடிக்கவில்லை. எதையோ ஆழ்ந்து சித்தித்தவன் போல, எதையோ இழந்துவிட்டவன் போல, தனிமை தான் இனி கதி என்ற மனதுடன் மண் தரையில் அமர்ந்திருந்தான். கடற்கரை மணலில் அவனது விரல்கள் யாரும் புரியா புதிராக சில கோலங்களை வரைந்துகொண்டிருந்தன. தனக்கு மேலே எழுதப்பட்டபோதிலும் மண்ணினால் கூட விளங்க இயலாத வரிகள் அவை. கடலில் ஆடி ஆடி ஆரவாரிக்கும் அலைகளை அவனது விழிகள் விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அப்படி என்ன தேடினால் கடலலையில்? என்ன நடந்தது அவனது வாழ்க்கையில்? 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து முதன் முறையாக பட்டணத்தை நோக்கிப் பயணமானவன் அவன். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெறவே கிராமம் அவனை பட்டணத்திற்கு வழிவிட்டனுப்பியிருந்தது. கிராமத்து மண்ணிலிருந்து பட்டணத்திற்கு வந்த அவனுக்கு பட்டணத்தின் கலாச்சாரத்துடன் இணைந்து செல்லவே பல மாதங்கள் பிடித்தது. பட்டணத்தின் பகட்டைக் கண்டதும் அதில் மயங்கி, பட்டணத்தில் தான் பிறந்திருக்கக் கூடாதா? எனது பெற்றோர் ஏன் கிராமத்தில் வாழுகின்றார்கள்? என்ற சிந்தை அவனது மனதை சிறைப்பிடித்திருந்தது. பட்டணத்து வாலிபர்களின் உடைகளும், உறவுகளும் இவனுக்கு தொடக்கத்தில் தன்னை மிகவும் தாழ்;த்திப் பார்க்கச் செய்தன. அவர்களைப் போல வாழவேண்டும் என விருப்பம்? ஆனால் தொடங்குவது எப்படி? நண்பனாக என்னை யார் ஏற்றுக்கொள்ளுவார்கள்? என்ற கேள்விகள் அவனது மனதில் சந்தேகத்தையே விதைத்துக்கொண்டிருந்தன. பெற்றோரை விட்டுப் பிரியவே தொடக்கத்தில் மனதில்லாத அவனது பாசத்தை பட்டணத்துக் காற்று நாளுக்கு நாள் வாரிச் சுருட்டிக்கொண்டுபோனது. 

ஏங்க மொவன் கிட்டயிருந்து கடுதாசி ஏதாச்சும் வந்துச்சா? என கிராமத்தில் அவனது தாய் தனது கணவனிடம் கேட்க, 'நானும் அன் கடுதாசிக்குத்தான் காத்துட்டுருக்கேன்' என்ற பதில் தான் விடையானது தாய்க்கு. மகனைக் குறித்து பெற்றோர் ஏங்கிக்கொண்டிருக்க, பெற்றோரைக் குறித்த நினைவு இவனுக்கு மங்கிக்கொண்டிருந்ததுளூ ஒரு கட்டத்தில் அது மறைந்து மயானத்தை நோக்கியும் பயணித்துவிட்டது. இதற்கு காரணம் அவன் பட்டணத்தில் வாழ்ந்த வாழ்க்கைதான். 

கல்லூரியில் தனிமையாகத் தொடங்கிய அவனுக்கு நாட்கள் சிலவற்றிலேயே நட்புகள் வளரத்தொடங்கியது. கிராமத்தை மறைத்து தான் பட்டணத்துக்காரன் என்பதை நிரூபிக்கும்படியாக அவன் ஆடைகள் முதல் அங்கங்கள் வரையிலும் முயற்சித்துக்கொண்டிருந்தான். அவனது உடையிலும், உள்ளத்திலும் பட்டணம் ஏறியது. பெற்றோரின் பயம் அற்ற சூழ்நிலைளூ தானே ராஜா என்ற மதி மயக்கம் அவனை தன்னிடம் இழுத்துக்கொண்டது. கெட்ட நண்பர்களின் ஐக்கியம், சகவாசம் மெல்ல மெல்ல அவனைச் சடலமாக்கப் போகின்றன என்பதை அறியாமல் அவர்களுடனான உறவில் உல்லாசம் கொண்டாடத்தொடங்கினான். போதைக்கு அடிமைளூ திரையரங்கே வீடு எனத் திரிந்தவனை மேலும் ஒரு வலை சுண்டி இழுத்துக்கொண்டது.....

நண்பர்கள் மத்தியில் நாட்களைக் கடத்திய அவன் ஒரு நண்பியின் நகையில் (சிரிப்பில்) நாட்களைக் கழிக்கத் தொடங்கினான். தொடக்கத்தில் உடன் கல்லூரி மாணவியாக வலம் வந்த அவளின் செம்பழுப்பு நிறமும், பழுப்பேறிய கருங் கூந்தலும் இவனை அவளது ரசிகனாக்கியவைகள். பேசிப் பழகும் தூரம் வராதா என ஏங்கிக்கொண்டிருந்த இவனது நெஞ்சம், ஒரு முறை அவள் தன்னிடத்தில் ஒரு உதவி கேட்க வந்தபோது அவளது பேச்சிலேயே தாகம் தணித்துக்கொண்டது. அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தான், அனுப்பிய பெற்றோரை மறந்து, ஆங்காங்கே நின்றான் அவளது தரிசனம் காணளூ தங்கிய அறைகளிலெல்லாம் தொங்கியது அவளது புகைப்படங்கள்தான்ளூ  உடன் மாணவியாய்ப் பார்த்த அவளிடம் சகோதரனைப் போல ஏய்த்துப் பழகியதால் அவள் கபடமில்லாத உறவில் அவனோடு நெருங்கிப் பழகினாள். 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று அவளிடம் சொல்வதற்காக அவன் உதட்டைப் பிதுக்கிப் பிதுக்கிப் கைகளைப் பிசைந்துகொண்டிருந்தபோதிலும் அவனது அங்க மொழிகளை அவள் அறிந்துகொள்ளவில்லை. ஒரு முறை தன்னிடத்தில் ஒரு உதவிக்காக வந்திருந்த அவளுக்கு மயக்க மருந்துகளைக் கொடுத்து தனது உடலின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டான். விழித்தெழுந்த அவள் வாழ மனமின்றி அவனது தடுப்புகளையும் மீறி ஓடிச் சென்றாள் கடற்கரைக்குளூ ஆறுகள் சங்கமமாகும் கடலில் தற்கொலை செய்து தன்னையும் சங்கமமாக்கினாள். 

மாணவியை மனைவியாக்க நினைத்து, அவளது உடலை உருக்குலைத்துவிட்டு, கடலில் கரைந்துபோன கன்னியை நினைத்து கடற்கரையிலே உடைந்துபோய் உட்கார்ந்திருப்பதையே தனது வாழ்க்கையாக்கிக்கொண்டான் அந்த வாலிபன். வாழவேண்டிய வயதில்ளூ ஒருத்தி வாழ்க்கையைக் கெடுத்ததால் இவனது வாழ்க்கையும் கெட்டுப்போனது. பெற்றோரை நினைவலைகளை விட்டு அகற்றிவிட்டு, கடற்கரையிலே தினமும் அந்தப் பெண்ணுக்காக நினைவு நாள் தியானம் செய்துகொண்டிருந்தது அவன் மனது. கடலில் கரைந்த பெண்னையே நினைத்து நினைத்து கருகிப்போனதுதான் அவனுக்கு மிஞ்சியது. 

இயேசுவின் அன்பிற்கு முன்னால் 
முந்துவதில்லை இவ்வுலகத்தின் அன்பு
சிந்தையை சீரழிக்கும் உறவுகளால்
உணர்விழந்தால் வாழ்வே உதிர்ந்துவிடும் 

பெற்றவரைப் பிரிந்தால் நீதான் மற்றவன்
முற்றும் கற்க நீ முடங்கினால் போதும்
போதையில் வாழ உன் வாழ்வே முற்றும்
அன்பிற்கு அலையாதே அன்பரண்டை ஓடிவா! 


நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்ளூ அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.(ஏசா 55:2)

No comments:

Post a Comment